சபை அலுவல்கள் |
திகதி : | 2010-05-05 |
ஆலோசனைக் குழுக்களும் (சட்டவாக்க) நிலையியற் குழுக்களும்
(அ) கீழ்க்கண்டவாறு நாற்பத்தைந்து (45) ஆலோசனைக்குழுக்கள் நியமிக்கப் படுமாக என்றும்,
1. பெளத்த சாசன, மத அலுவல்கள் ஆலோசனைக்குழு
2. அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு பற்றிய ஆலோசனைக்குழு
3. நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவம் பற்றிய ஆலோசனைக்குழு
4. அனர்த்த முகாமைத்துவம் பற்றிய ஆலோசனைக் குழு
5. சுகாதாரம் பற்றிய ஆலோசனைக்குழு
6. பெற்றோலியக் கைத்தொழில்கள் பற்றிய ஆலோசனைக்குழு
7. நீர்வழங்கல், வடிகாலமைப்பு பற்றிய ஆலோசனைக்குழு
8. மரபார்ந்த கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு
9. உள்ளூராட்சி, மாகாண சபைகள் பற்றிய ஆலோசனைக்குழு
10. புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பற்றிய ஆலோசனைக்குழு
11. கைத்தொழில், வாணிபம் பற்றிய ஆலோசனைக்குழு
12. நிர்மான, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் பற்றிய ஆலோசனைக்குழு
13. மின்வலு, எரிசக்தி பற்றிய ஆலோசனைக்குழு
14. பொருளாதார அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு
15. அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு
16. வெளிநாட்டலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
17. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
18. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
19. மீள்குடியேற்றம் பற்றிய ஆலோசனைக்குழு
20. தபால், தொலைத் தொடர்புகள் பற்றிய ஆலோசனைக்குழு
21. தேசிய மரபுரிமைகள், கலாசார அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
22. சுற்றாடல் பற்றிய ஆலோசனைக்குழு
23. சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
24. நீதி பற்றிய ஆலோசனைக்குழு
25. தொழில் உறவுகள், விளைவுப்பெருக்க மேம்பாடு பற்றிய ஆலோசனைக்குழு
26. கல்வி பற்றிய ஆலோசனைக்குழு
27. பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றிய ஆலோசனைக்குழு
28. கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு
29. சுதேச மருத்துவத்துறை பற்றிய ஆலோசனைக்குழு
30. தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு பற்றிய ஆலோசனைக்குழு
31. காணி, காணி அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு
32. சமூக சேவைகள் பற்றிய ஆலோசனைக்குழு
33. விளையாட்டுத்துறை பற்றிய ஆலோசனைக்குழு
34. கமத்தொழில் பற்றிய ஆலோசனைக்குழு
35. போக்குவரத்து பற்றிய ஆலோசனைக்குழு
36. இளைஞர் அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
37. கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம் பற்றிய ஆலோசனைக்குழு
38. தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி பற்றிய ஆலோசனைக்குழு
39. நிதி, திட்டமிடல் பற்றிய ஆலோசனைக்குழு
40. மக்கள் தொடர்பாடல், தகவல் பற்றிய ஆலோசனைக்குழு
41. சனசமூக அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு பற்றிய ஆலோசனைக்குழு
42. பாதுகாப்பு பற்றிய ஆலோசனைக்குழு
43. துறைமுகங்கள், விமான சேவைகள் பற்றிய ஆலோசனைக்குழு
44. நெடுஞ்சாலைகள் பற்றிய ஆலோசனைக்குழு
45. உயர் கல்வி பற்றிய ஆலோசனைக்குழு
நிலையியற் கட்டளை 109 இன் பிரகாரம், அதற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அத்தகைய விடயங்களைப் பரிசீலித்து அறிக்கையிடுவதற்கு, ஒவ்வொரு குழுவும் ஐந்துக்குக் (5) குறையாத, இருபத்தைந்திற்கு (25) மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும்;
ஒவ்வொரு குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்றாக (3) இருக்க வேண்டும் என்றும்;
(ஆ) முறையே “ஏ” நிலையியற்குழு மற்றும் “பீ” நிலையியற்குழு என்றழைக்கப்படும் இரண்டு (சட்டவாக்க) நிலையியற்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும்;
ஒவ்வொரு குழுவும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருப்பதோடு ஏதேனுமொரு குறித்த சட்டமூலமொன்று பரிசீலனைக்கு விடப்படுமிடத்து மேலதிகமாக பதினைந்து (15) உறுப்பினர்களுக்கும் விஞ்சாத எண்ணிக்கையினை ஒவ்வொரு குழுவுக்கும் நியமிப்பதற்கு சபாநாயகர் அதிகாரமளிக்கப் பட வேண்டும் என்றும்;
ஒவ்வொரு குழுவினதும் கூட்ட நடப்பெண் நான்கு (4) ஆக இருக்க வேண்டும் என்றும் கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் முன்வைத்த பிரேரணையை சபை இணங்கியேற்றது.
சபைக்குழு
நிலையியற் கட்டளை 122 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாது, சபைக்குழு, சபாநாயகரைத் தவிசாளராகவும், தெரிவுக் குழுவால் நியமிக்கப்படும் பத்து (10) பேரை உறுப்பினர்களாகவும் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
123 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரையும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் பத்து (10) ஏனைய உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
124 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சி முதற்கோலாலாசன், எதிர்க்கட்சி முதற்கோலாசான் ஆகியோரையும் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் இருபத்திநான்கு (24) ஏனைய உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு
125 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் அரசாங்க கணக்குக் குழுவானது தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு
126 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் முப்பத்தியொரு (31) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
சிறப்புரிமைகள் பற்றிய குழு
127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் பதினைந்து (15) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
பொது மனுக்கள் பற்றிய குழு
128 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பொதுமனுக்கள் பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் இருபத்தொன்பது (29) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
உயர் பதவிகள் பற்றிய குழு
128 (அ) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் உயர் பதவிகள் பற்றிய குழுவானது தெரிவுக்குழுவினால் நியமிக்கப்படும் பத்தொன்பது (19) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சபை இணங்கியது.
சபையின் பிரதான அலுவல்கள்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
பின்வரும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது:-
"பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை, - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (மே 04, 2010), - 1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், தேசிய அரசுப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40 ஆம் அத்தியாயமான) பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் II ஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2010 மே மாதம் 02 ஆம் திகதியிலிருந்து இலங்கையெங்கனும் நடைமுறைப்படுத்திக்கொண்டு செய்யப்பட்ட பிரகடனம் அங்கீகரிக்கப்படுமாக"
அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 118 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் அதற்கு எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1705 மணியளவில் பாராளுமன்றமானது 2010 மே 06 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்