2024 ஜனவரி 10ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2024-01-10 |
|
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ, 41இ, 41ஈ மற்றும் 41உ ஆகிய உறுப்புரைகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அரசியலமைப்பின் 41எ என்னும் உறுப்புரையின் (3) ஆம் பந்தியின் கீழ் அரசியலமைப்புப் பேரவையினால் ஆக்கப்பட்டு, 2023 டிசம்பர் 31 ஆம் திகதிய 2364/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கும்
(iii) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கைகள்.
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நாற்பத்து நான்காவது ஆண்டறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை மற்றும் முதுகலை பயிற்சி மையத்தின் ஆண்டறிக்கை
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை
(vii) 2022 ஆம் ஆண்டுக்கான மாணிக்கம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(viii) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் குமார சுமித்தராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ அநுர திசாநாயக்க
(ii) கௌரவ ஜயந்த சமரவீர
(iii) கௌரவ அசங்க நவரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ நாலக பண்டார கோட்டேகொட
(ii) கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி
(iii) கௌரவ எஸ்.எம். மரிக்கார்
(iv) கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மருத்துவ பீடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(iii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
புதிய கெசினோ உரிமங்கள்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ நிதி இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பயங்கரவாதச் செயல்களிலிருந்தும், இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியே புரியப்பட்டவையும் பயங்கரவாதத்துடன் இணைந்தவையுமான வேறு தவறுகளிலிருந்தும் மற்றும் பயங்கரவாதம் என்ற தவறாகவமைகின்ற குறித்தசில குறித்துரைக்கப்பட்ட செயல்களிலிருந்தும் இலங்கையின் தேசியப் பந்தோபஸ்தையும் இலங்கை மக்களையும் பாதுகாப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும்; இலங்கைக்கு வெளியே பயங்கரவாதத்துக்காக ஆயத்தஞ்செய்வதற்கு இலங்கை ஆள்புலத்தையும் அதன் மக்களையும் பயன்படுத்துவதனைத் தடுப்பதற்காகவும்; பயங்கரவாதச் செயலொன்றை அல்லது பயங்கரவாதத்துடன் இணைந்த வேறேதேனும் தவறைப் புரிந்துள்ள எவரேனுமாளைக் கண்டுபிடிப்பதற்காகவும், அடையாளங்காண்பதற்காகவும், பற்றுவதற்காகவும், கைது செய்வதற்காகவும், தடுத்து வைப்பதற்காகவும், புலனாய்வு செய்வதற்காகவும், அவருக்கெதிராகக் குற்றவழக்குத்தொடுப்பதற்காகவும் மற்றும் அவரைத் தண்டிப்பதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்காகவும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்காக
“பயங்கரவாத எதிர்ப்பு”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரை களையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023 யூன் மாதம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால், குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லையானது பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2024 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) மத்தியஸ்தத்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம்
(iii) மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம்
(iv) அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம்
(v) நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(vi) மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(vii) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான பிரகடனம்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் வினாவொன்று கேட்கப்பட்டது:-
கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜனவரி 11ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.