2023 டிசம்பர் 13ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-12-13

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : இணைந்த வருடாந்த பொதுக் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIV ஆம் பகுதியையும் ;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVII ஆம் பகுதியையும் ; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXV ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டி கடன் நிதியத்தின் ஆண்டறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை புகையிரத திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான சிலோன் பெற்றோலியம் ஸ்ரோரேஜ் டேமினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “சவீர மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “பவித்ரா வன்னியாரச்சி சகுர்த மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    “ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கை அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v)    வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக்க பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vi)    மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ டி.பி. ஹேரத்                    
(ii)    கௌரவ சம்பத் அதுகோரல                                        
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ ரொசான் ரணசிங்க 

தன்னைப் பற்றிய தவறான செய்தி அறிக்கைகள்


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 (1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 திசம்பர் 12 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, 2023 நவம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இருபதெட்டு (28) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு மேலதிகமாக அரச பெருந்தோட்ட தொழில்முயற்சி மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக.

அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அவ்வமைச்சுசார் ஆலோசனைக் குழு, உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அதன் தவிசாளராகவும், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (05) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.

அவ்வமைச்சுசார் ஆலோசனைக் குழுவினது கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ காமினி லொக்குகே அவர்களுக்கு “தஹம் செவன சிகித்தோ சிறுவர் அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024)  - குழு

ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபத்தாறாவது நாள் - குழு நிலை விவாதம்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) (வரவு செலவுத் திட்டம்), 41 பெரும்பான்மை வாக்குகளால்  (ஆதரவாக 122; எதிராக 81; தவிர்ந்து கொண்டோர் 01) சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 10 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 10 ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-
(ii)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(iv)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(v)    இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர், அங்கத்தவர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் ஊதியத்தினை தீர்மானித்தல்
(vi)    தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் —  இரண்டாம் மதிப்பீடு


அதனையடுத்து, 1901 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜனவரி 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.