2023 டிசம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-12-11 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
“பாராளுமன்ற தரநிலைகள் குறித்த முன்மொழியப்படவுள்ள சட்டமூலம்“ தொடர்பான கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுடனான கூட்டம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) “இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கை மற்றும் கூட்ட அறிக்கை அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ டலஸ் அழகப்பெரும - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
சேதனப் பசளை இறக்குமதி குறித்த கணக்காய்வு அறிக்கை
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களுக்கு “ராஜித சேனாரத்ன மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ‘சன்டே டய்ம்ஸ்’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை தொடர்பில் கூற்றொன்றினை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபத்து நான்காம் நாள் - குழு நிலை விவாதம்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 8 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(ii) இலங்கை மகாவலி அதிகாரச் சபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2020)
(iv) சென்ட்ரெல் இன்ஜினியரிங் சோ்விஸெஸ் (ப்ரைவட்) லிமிடட்டின் வருடாந்த அறிக்கை (2020)
(v) இலங்கை மகாவலி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2019)
(vi) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன் - மூன்றாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 100; எதிராக 55)
(vii) நிதிச் சட்டமூலம்
(viii) குறைநிரப்புத் தொகை — நிகழ்ச்சித்திட்டம் 01
அதனையடுத்து, 1710 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 12ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2024]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






