2023 டிசம்பர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-12-10

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “இலங்கை மருந்தியல் சங்கம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்     
B : “றுஹுணு உதானய அமைப்பு (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்    


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர  

தன்னைப் பற்றிய கௌரவ சந்திம வீரக்கொடி அவர்கள் சிறப்புரிமை விடயம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் பிரேரிக்கப்பட்டன.:-
(i)    சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii)    நிதிச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii)    குறைநிரப்புத் தொகை - நிகழ்ச்சித்திட்டம் 01


அதனையடுத்து, 1205 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 11ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.