2023 டிசம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-12-09 |
|
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூன் 01 ஆம் திகதிய 2334/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரிவு தொடர்பான கூற்றொன்றினை சுகாதார அமைச்சர் கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்கள் முன்வைத்தார்.
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ காமினி வலேபொட
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தொடர்பான கருத்துரைகள்
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர
பிரேரிக்கப்படவுள்ள புதிய மின்சாரச் சட்டமூலம் தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் நாள் - குழு நிலை விவாதம்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 9 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(ii) தேயிலைச் சபைச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(v) தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை (2020)
(vi) தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(vii) தலவாக்கலை இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(viii) தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2020)
(ix) சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2021)
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 10ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2024]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.