சபை அலுவல்கள் |
திகதி : | 2010-02-05 |
கெளரவ சந்தனம் அருள்சாமி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்)
பயங்கரவாத அல்லது நாசகாரச் செயற்பாட்டின் அல்லது குடியமைதிக் குலைவின் விளைவொன்றினால் காணாமற்போனதாக அறிக்கையிடப்பட்ட ஆட்களினதும், தேசிய மட்டத்தில் பாரதூரமான விளைவுகளையுடைய ஏதேனும் இயற்கை அனர்த்தம் அல்லது பேரிடர் எவ்வாட்களின் இறப்புக்கு நேரடியாக ஏற்றிக்கூறப்படற்பாலதாகின்றதோ அவ்வாட்களினதும் இறப்புக்களைப் பதிவுசெய்வதற்கும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பிரேரித்தார்.
சமுதாயஞ்சார் சீர்திருத்தம் (திருத்தம்)
சமுதாயஞ்சார் சீர்திருத்த ஆணையாளரின் பதவிப்பெயரை மாற்றுவதற்கும் விளைவாந் தன்மையினவான எழுத்திலான வேறு சட்டங்களுக்கு அவசியமான திருத்தங்களைச் செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பிரேரித்தார்.
கெளரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்களுக்கு "கொடசர பியங்கல ரஜமகா விஹாரஸ்த அபிவிருத்தி சபை (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2010 பெப்ரவரி 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 87 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் அதற்கு எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 46 முதல் 50 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-
(i) தேசமான்ய எச். கே. தர்மதாச கேந்திரஸ்தானம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு
(ii) ஸ்ரீ பியரத்தன சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அடிப்படை மன்றம் (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு
(iii) குளோபல் ஹியுமெனிடேரியன் பவுன்டேஷன் (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு
(iv) ஸ்ரீ தம்மாலங்கார சமூக சேவைகள் மன்றம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு
(v) செந்தாமரை (சர்வதேச) இலங்கை அமைப்பு (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 52 முதல் 55 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) சிறிநிவெஸ் பிரஜாமித்ர சஹயோகிதா கேந்திரம் (கூட்டிணைத்தல்)
(ii) ஹெம்டன் விலேஜ் இலங்கை நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்)
(iii) மாளிகாவத்தை ஜனாஸா மற்றும் நலன்புரிச் சங்கம் (கூட்டிணைத்தல்)
(iv) புலத்திசி தறுவோ மன்ற நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்)
அதனையடுத்து, 1654 மணியளவில் பாராளுமன்றமானது 2010 பெப்ரவரி 23 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்