2023 டிசம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-12-08 |
|
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “சமாதி தியான மற்றும் யோகாசன நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் ஆண்டறிக்கைகள்
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii) 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான ஸ்ரீலங்கா எனர்ஜிஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள்
(iv) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 ஒக்டோபர் 30 ஆம் திகதிய 2356/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், KIU கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனம் மற்றும் அக்குவைனஸ் கொலேஜ் ஒப் ஹயர் ஸ்டடிஸ் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 செப்தெம்பர் 07 ஆம் திகதிய 2348/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனம், எஸ். எல். ரி. கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனம், ஹொரைசன் கொலிஜ் ஒப் பிஸ்னஸ் டெக்னொலொஜி (பிறைவேட்) லிமிடெட் நிறுவனம், சனச கம்பஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிடெட் (NSBM) நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 செப்தெம்பர் 07 ஆம் திகதிய 2348/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், பெனட்டிக் XVI கத்தலிக் இன்ஸ்ரிரியுற் ஒப் ஹயர் எடியுகேஷன் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 செப்தெம்பர் 13 ஆம் திகதிய 2349/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், KIU கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஒக்டோபர் 09 ஆம் திகதிய 2353/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், அளவையிடுதல் தேசப்படம் வரைதல் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஒக்டோபர் 18 ஆம் திகதிய 2354/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், பெனட்டிக் XVI கத்தலிக் இன்டநெஷனல் இன்ஸ்ரிரியுற் ஒப் ஹயர் எடியுகேஷன் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஒக்டோபர் 18 ஆம் திகதிய 2354/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகம் (ஐசிஏஎஸ்எல்) நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஒக்டோபர் 25 ஆம் திகதிய 2355/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ், கேட்வே கொலேஜ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 நவம்பர் 03 ஆம் திகதிய 2356/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற பட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 நவம்பர் 03 ஆம் திகதிய 2356/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ அநுர திசாநாயக்க
(ii) கௌரவ டலஸ் அழகப்பெரும - ஐந்து மனுக்கள்
(iii) கௌரவ விமலவீர திசாநாயக்க
(iv) கௌரவ கபில அதுகோரல
(v) கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ அநுர திசாநாயக்க
வீதி அபிவிருத்தி அதிகாரசபை சேவை பிரமாணக் குறிப்புகளிலுள்ள சிக்கல்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை விவகாரங்களை ‘ஸஹஸ்யா இன்வெஸ்ட்மன்ட் லிமிடட்’ இற்கு ஒப்படைத்தல் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ சஜித் பிரேமதாச
இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ செல்வராசா கஜேந்திரன்
கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் தன்னை மற்றும் தமது கட்சித் தலைவர் பற்றி தெரிவித்த கருத்துரைகள்
சிறப்புரிமைக் கேள்விகள்
(i) கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல
எதிர்க்கட்சி முதற்கோலாசான் பதவிக்கான ஆட்சேர்ப்பு மற்றும் இதர வசதிகள்
(ii) கௌரவ சனத் நிஷாந்த
2023 நவம்பர் 21 அன்று சபையில் எதிர்க்கட்சித் தலைவருடன் ஏற்பட்ட சம்பவம் தொடர்பானது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுக்கு “மனித உரிமைகள் அமைப்பு (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தை மீளப்பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபத்திரண்டாம் நாள் - குழு நிலை விவாதம்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 22 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(ii) வரையறுக்கப்பட்ட விமானநிலைய மற்றும் விமானச் சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2022)
(iii) செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(iv) செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(v) இலங்கை பத்திரிகைப் பேரவையின் வருடாந்த அறிக்கையும் கணக்குக் கூற்றும் (2020)
(vi) வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் அறிக்கை (2021)
(vii) இலங்கை அச்சக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை (2015)
(viii) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(ix) தி அஸோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்டின் வருடாந்த அறிக்கை (2020)
(x) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xi) இலங்கை மன்றத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(xii) தி அஸோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்டின் வருடாந்த அறிக்கை (2021)
(xiii) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xiv) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(xv) இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2015)
(xvi) இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2016)
(xvii) இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(xviii) இலங்கை அச்சக நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2016)
(xix) இலங்கை அச்சக நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2017)
(xx) இலங்கை அச்சக நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2018)
(xxi) இலங்கை அச்சக நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(xxii) இலங்கை அச்சக நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“அறுவடையை அதிகரிக்க விவசாய நவீனமயமாக்கல் திட்டம்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜகத் சமரவிக்கிரம அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1837 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 09ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2024]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.