2023 டிசம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-12-07

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தைத் தாபிப்பதற்கான கூட்டம்  


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXXVI மற்றும் XXXVII ஆம் பகுதிகளையும் மற்றும் நான்காம் தொகுதியின் XVI, XVII மற்றும் XVIII ஆம் பகுதிகள்

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIII ஆம் பகுதியையும் ;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXV ஆம் பகுதியையும்; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIII மற்றும் XXXIV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XVIII ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவு மற்றும் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, களனி பல்கலைக்கழகத்தில் நாடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையினை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2023 ஏப்ரல் 03 ஆம் திகதிய 2326/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லஸந்த அழகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ லசந்த அலகியவன்ன
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    நொத்தாரிசு (திருத்தம்) - 107 ஆம் அத்தியாயமான) நொத்தாரிசுக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    மோசடிகளைத் தடுத்தல் (திருத்தம்) - 70 ஆம் அத்தியாயமான) மோசடிகளைத் தடுத்தல் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபத்தோராம் நாள் - குழு நிலை விவாதம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தானியப் பொருட்களுக்கு (போஷா) சேர்பெறுமதி வரிச் சலுகையை வழங்குதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அசங்க நவரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1909 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.