2023 டிசம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-12-06

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்     
B : “வைட் றோஸ் மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்     
C : “மாத்தறைப் பருவம்” அமைப்பு (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்     
D : “சமாதி சுகாதார சேவைகள், சுற்றாடல், விவசாய, கலாசார, மற்றும் விளையாட்டு நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்     
E : வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
F : தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
G : மலைநாட்டினைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தைத் தாபிப்பதற்கான கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021/2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான காலி மரபுரிமை மன்றம் வருடாந்த அறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சுவடிகூடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ துமிந்த திசாநாயக்க                    
(ii)    கௌரவ துஷார இந்துனில் அமரசேன                    
(iii)    கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட                    
(iv)    கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

வறுமை, வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை, பணவீக்கம் போன்றவை பற்றிய புள்ளிவிவரங்கள்


தனிப்பட்ட விளக்கங்கள்

கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம்

கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துரைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபதாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(ii)    சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii)    புத்தசாசன நிதியத்தின் வருடாந்த அறிக்கைகள் (2016 மற்றும் 2017)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கொழும்பு மற்றும் புறநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமை, இதரவை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிரேம்நாத் சீ. தொலவத்த அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1928 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 07ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.