2023 டிசம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-12-05 |
|
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : “சஹன சமுதாய அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
B : “கிழக்கு மீளெழுச்சி அமைப்பு (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ புத்திக பத்திறண
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 ஒக்தோபர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களுக்கு “வன்னி மண் அறக்கட்டளை நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாள் - குழு நிலை விவாதம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1943 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 06ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2024]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.