2023 டிசம்பர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-12-04

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள்  பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ றோஹண திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் தன்னைப் பற்றி சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பாக கூற்றொன்றினை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ வேலு குமார் அவர்களுக்கு “மலையக மாணவர் உயர்கல்வி நிதிய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாள் - குழு நிலை விவாதம்

(ii) விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் நான்கு ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 5 வரையான விடயங்கள்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சீனி தொழிற்சாலையினால் கல்லோயா விவசாயிகளிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணி தொடர்பான பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சட்டத்தரணி எஸ். எம். எம். முஸ்ஸாரப் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1918 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.