2023 டிசம்பர் 02ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-12-02

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “தென்னிலங்கை மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 52 (5) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன் முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஒக்டோபர் 25 ஆம் திகதிய 2355/30 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iii)    2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.10.01 முதல் 2023.10.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ டீ. பி. ஹேரத்
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் (ஆதரவாக 57; எதிராக 01; தவிர்ந்து கொண்டோர் 03), சபை ஏற்றுக் கொண்டது-

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் விதந்துரைப்புக்களை செயற்படுத்தல்

2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (திருமதி) டயனா கமகே, கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா மற்றும் கௌரவ ரோஹண பண்டார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் 2023 திசம்பர் 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விதந்துரைப்புக்களுக்கு ஏற்ப பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (திருமதி) டயனா கமகே, கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா மற்றும் கௌரவ ரோஹண பண்டார ஆகியோரின் பாராளுமன்றச் சேவை, இன்றைய தினத்திலிருந்து அதாவது 2023 டிசம்பர் 02 ஆம் திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாள் - குழு நிலை விவாதம்

(ii)    இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை (2021) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டின் மீதமுள்ள தொகையை வழங்குதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1903 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 04ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.