2023 டிசம்பர் 01ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-12-01

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு
(ii)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கைகள்
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை இணக்கப்பாட்டுப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ வீரசுமன வீரசிங்க

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

உள்ளூராட்சி மன்ற தேர்தலினை நடத்துவது தொடர்பிலான பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    இந்தியாவிலிருந்து ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் இறக்குமதி செய்வது தொடர்பான கூற்றொன்றினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.
(ii)    இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் ஆகியவற்றை மறுசீரமைத்தல் தொடர்பாக 2023.11.15 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்ஹ அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைகள்

(i)    பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுராத ஜயரத்ன அவர்களினாலும் மற்றும் ஏனைய இருபத்தி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் 2023 நவம்பர் 13 ஆம் திகதிய கடிதம் மூலம் கௌரவ சபாநாயகருக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம், கௌரவ சபாநாயகர் அவர்களினால் 2023 நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii)    பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினாலும் மற்றும் ஏனைய இருபத்தாறு பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் 2023 நவம்பர் 14 ஆம் திகதிய கடிதம் மூலம் கௌரவ சபாநாயகருக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம், கௌரவ சபாநாயகர் அவர்களினால் 2023 நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(iii)    உதவிச் செயலாளர் நாயகம் திரு. ஹன்ஸ அபேரத்னவினால் 2023 நவம்பர் 13 ஆம் திகதிய கடிதம் மூலம் கௌரவ சபாநாயகருக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம், கௌரவ சபாநாயகர் அவர்களினால் 2023 நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாள் - குழு நிலை விவாதம்


அதனையடுத்து, 1808 மணியளவில் பாராளுமன்றமானது 2023 டிசம்பர் 02ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.