2023 நவம்பர் 28ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-11-28

Print

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும் ;
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XX ஆம் பகுதியையும் ;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLI ஆம் பகுதியையும் ;
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LII ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும்;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIV மற்றும் XLV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXIV ஆம் பகுதியையும்; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII, XXIV, XXV, XXVI, XXVII, XXVIII, XXIX, XXX, XXXI மற்றும் XXXII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XIII, XIV மற்றும் XV ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் XI, XII, XIII, XIV, XV, XVI  மற்றும் XVII ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் வருடாந்த அறிக்கை
(iv)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை

(v) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் பொதுத் தொழில்முயற்சித் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ ரொசான் ரணசிங்க

தான் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் தினமின பத்திரிகைக்கு அனுப்பப்பட்ட செய்தி


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாம் நாள் - குழு நிலை விவாதம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மன்னாரில் இல்மனைட் அகழ்வுக்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுவதை நிறுத்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1837 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 29ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.