இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 நவம்பர் 27ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-11-27

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சுற்றுலாத்துறை  மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹரின் பர்னாந்து அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க
 
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


தனிப்பட்ட விளக்கங்கள்

கௌரவ ரொசான் ரணசிங்க

தனது வாகனத்தை தேடும் நடவடிக்கை குறித்த “டெய்லி மிரர்” செய்திக் கட்டுரை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டாம் நாள் - குழு நிலை விவாதம்

(ii) அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2021) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“உயர் தர பாடத்திட்டத்தில் சமூகவியலை உட்சேர்த்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1826 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 28ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom