இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-12-08

சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பெண்கள் மீதான தேசிய ஆணைக்குழு

பெண்களின் உரிமைகளை முன்னெடுப்பதற்கும் மதிப்பதற்கும் மேம்படுத்தற்கும் அத்துடன் காப்பதற்குமான என ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் பெண்களின் உரிமைகள் தொடர்பில் சர்வதேச பொருத்தனைகள் மற்றும் நியமங்களின் ஏற்பாடுகளுக்குப் பயன்கொடுப்பதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டுகை அமைச்சர் பிரேரித்தார்.

தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகம்

தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகமொன்றைத் தாபிப்பதற்கும், நிறுவகத்தின் நிருவாகத்திற்கென ஆளுநர் சபையொன்றைத் தாபிப்பதற்கும்; தொழினுட்பக் குழுக்களையும் தொழிற்சங்கங்களுக்கான பாடசாலை ஒன்றையும் தாபிப்பதற்கும்; ஆராய்ச்சியை நடாத்துவதற்கும், அளவைகளை நிறைவேற்றுவதற்கும், அத்துடன் இலங்கையில் தொழிற்கற்கைகளை மேம்படுத்துவதற்கு பயிற்சியை ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ தொழில் உறவுகள், மனிதவலு அமைச்சர் பிரேரித்தார்.

நிர்மாணத் தொழில் அபிவிருத்தி

இலங்கையில் நிர்மாணத் தொழிலின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கு ஏற்பாடு செய்வதற்கும், நிர்மாணத் தொழிலின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவற்கும், விதிமுறைப்படுத்துவதற்கும் தரப்படுத்துவதற்கும்; நிர்மாணம் மீதான தேசிய மதியுரைப் பேரவையைத் தாபிப்பதற்கும்; நிர்மாணத் தொழில் அபிவிருத்தி நிதியத்தைத் தாபிப்பதற்கும் அத்துடன் நிர்மாணத் தொழிலபிவிருத்தி அதிகார சபையைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


இப் பாராளுமன்றம் இன்று அதன் அமர்வு கலையும்போது 2010 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு. ப. 9.30 மணிவரை ஒத்திவைக்கப்படுமாக எனும் பிரேரணை, 43 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு (சார்பாக 89, எதிராக 54) சபையால் நிறைவேற்றப்பட்டது.


பின்வரும் பாராளுமன்ற தெரிகுழுக்களின் காலத்தை 2010 மார்ச் 31ஆம் திகதி வரை மேலும் நீடிப்பதற்கு பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது;

  • மனிதரால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளை விசாரணை செய்வதற்கும் அவற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்குமான தெரிகுழு

  • தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான தெரிகுழு

  • வேகமாக அதிகரித்து வரும் வாகன விபத்துக்களைப் பற்றி ஆராய்வதற்கான தெரிகுழு

கெளரவ (வண.) அதுரலிய ரதன தேரர் அவர்களுக்கு "சமனலகிரி சதராங்க (நாடி) வைத்திய சபை (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ஜயந்த சமரவீர அவர்களுக்கு "இலங்கை படம் வரையும் தொழினுட்பவியலர் நிறுவகம் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2009 டிசம்பர் 02ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 74 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும் அதற்கு எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் குறைநிரப்பும் தொகைகள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) தலைப்பு 306 - நிகழ்ச்சித்திட்டம் 02 (போக்குவரத்து அமைச்சு) - ரூபா. 4,750,000,000
(ii) தலைப்பு 285 - நிகழ்ச்சித்திட்டம் 01 (கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சு) - ரூபா. 50,000,000


சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 39 முதல் 45 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழுக்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-

(i) பிலியந்தல தர்மசாஸ்த்ரோதய பிரிவேன் விகாரஸ்த சங்வர்தன சபாவ (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு

(ii) மாத்தறை இராகுல கல்லூரி பழைய மாணவர் கழகம் (கொழும்புக் கிளை) (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு

(iii) தொழில் உத்தியோகத்தர்களின் சங்க நலன்புரி நிதியம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு

(iv) பிரேமதாச மத்திய நிலையம் (கூட்டிணைத்தல்) - "ஏ" நிலையியற்குழு

(v) ஸ்ரீ சுமங்கல சரண சேவா மன்றம் (கூட்டிணைத்தல்) - "பி" நிலையியற்குழு

(vi) அல் ஜாமியாத்துல் கவ்ஸிய்யா (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - "பி" நிலையியற்குழு

(vii) ஹங்குரான்கெத மாதன்வல ரஜ மகா விகாரை மன்றம் - "பி" நிலையியற்குழு


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 47 முதல் 54 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i) ஸம் நம்பிக்கைப்பொறுப்பு (கூட்டிணைத்தல்)

(ii) இலங்கை சிறுகைத்தொழிற் சபை (கூட்டிணைத்தல்) (திருத்தம்)

(iii) அல்ஹாஜ் எஸ். எம். எம். ஹுஸைன் தரும நம்பிக்கைப்பொறுப்பு (கூட்டிணைத்தல்)

(iv) மஹிந்தானந்த அலுத்கமகே மன்றம் (கூட்டிணைத்தல்)

(v) இலங்கை கருத்திட்ட முகாமையாளர் நிறுவகம் (கூட்டிணைத்தல்)

(vi) சமோதா மன்றம் (கூட்டிணைத்தல்)

(vii) கிராஸ்ரூட்ஸ் மன்றம் (கூட்டிணைத்தல்)

(viii) வாரியபொல ராஜமகா விஹாரை அபிவிருத்திச் சங்கம் (கூட்டிணைத்தல்)



அதனையடுத்து, 1543 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஜனவரி 05 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom