இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 நவம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-11-24

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “தஸ்ஸனா பௌத்த சன்விதானய (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
B : அமைச்சரவை அங்கத்துவம் அல்லாத பெருந்தோட்டத் தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான குழுநிலை விவாதம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVI, XXVII, XXVIII, XXIX, XXX, XXXI, XXXII, XXXIII, XXXIV, மற்றும் XXXV ஆம் பகுதிகளையும், நான்காம்  தொகுதியின் IX, X, XI, XII, XIII, XIV மற்றும் XV ஆம் பகுதிகளையும், ஐந்தாம்  தொகுதியின் VIII மற்றும் IX ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் IX, X, XI, XII, XIII, XIV, XV, XVI, XVII, XVIII, XIX, XX, XXI, XXII, XXIII, XXIV  மற்றும் XV ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான சட்டமா அதிபதி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய
 
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன்களை செலுத்தாமை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 8 ஆம் இலக்க விடயங்கள்) பின்வருவன சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 4 முதல் 8 வரையான விடயங்கள் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டன.:-

(ii)    இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(iii)    இலங்கை மின்சார சபையின் வருடாந்த அறிக்கை (2021)
(iv)    சஹன சமுதாய அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(v)    சமாதி தியான மன்றும் யோகாசன நிலையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vi)    றுஹுணு உதானய அமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vii)    “மாத்தறைப் பருவம்” அமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(viii)    இலங்கை மருந்தியல் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் மூலம் சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லலித் வர்ணகுமார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1828 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 25ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom