இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 நவம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-11-23

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “பாராளுமன்ற தரநிலைகள் குறித்த முன்மொழியப்படவுள்ள சட்டமூலம்“ தொடர்பான கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுடனான  கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii)    2012, 2013, 2014, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான எல்கடுவ பிளான்டேசன் லிமிடெட்டின் ஆண்டறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பொது மக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டிரான் அலஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் மூன்று அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சுதத் மஞ்சுல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடைவுகளை மீளாய்வு செய்வதற்கான திட்டம் தொடர்பாக 2023.11.14 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக அமைச்சரவை அங்கத்தவர் அல்லாத அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர 

கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி அவர்களினால் தன்னைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து


சிறப்புரிமைகள்

(i)    பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 நவம்பர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii)    பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 நவம்பர் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2024) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட ஒன்பதாம் நாள் - குழு நிலை விவாதம்

(ii) குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முப்படைகளின் மாற்றுத்திறனாளிகள், ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கு அவர்கள் ஊதியம் பெறும் பதவிக்கு ஏற்ப அந்தஸ்தைப் பயன்படுத்த அனுமதித்தல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1841 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2024]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom