2023 நவம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-11-20 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : பாராளுமன்ற குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது மற்றும் பிற கட்டுப்பாடுகள் தொடர்பானது
B : கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
C : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இலங்கை கிரிகெட்டினை தடை செய்தல் தொடர்பான கூற்றொன்றினை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரொசான் ரணசிங்க அவர்கள் முன்வைத்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
தன்னைப் பற்றிய இலங்கை கிரிகெட் சபையின் கூற்று
(ii) கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே
பத்திரிகையாளர் சந்திப்பில் சட்டத்தரணி சஞ்சய மஹவத்த மற்றும் பலரினால் தனக்கு சேறு பூசும் நடவடிக்கை
(iii) கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார
கௌரவ ஹேஷா விதானகே அவர்களினால் தன்மீது முன்வைக்கும் குற்றச்சாட்டு
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஆறாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தேசிய மதிப்பீட்டு சட்டமூலத்தை கொண்டு வரல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பத்திறண அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1821 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2023 நவம்பர் 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2024]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






