2023 நவம்பர் 16ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-11-16 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயந்த திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ றோஹண திஸாநாயக்க
(ii) கௌரவ வஜிர அபேவர்தன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
மில்கோ மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை என்பன இந்தியாவின் அமோல் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக 2023.10.17 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நிலை (B-READY) சுட்டெண்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சி களுக்கான தயார்நிலை (B-READY) சுட்டென்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023 மே 11 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லையானது பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2024 சனவரி 22 ஆம் திகதி வரை கால நீடிப்புச் செய்யபடுமாக
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“குளங்களை புனரமைப்பதற்கான வழிமுறை” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1819 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2024) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2023 நவம்பர் 17ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2024]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






