2023 நவம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-11-09 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : 2023 நவம்பர் 13ஆம் திகதி, திங்கட்கிழமை தினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பானது
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள்
(ii) 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தற் சட்டத்தின் 20 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 26 ஆம் பிரிவின் கீழ் கமத்தொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் 18 ஆம் திகதிய 2345/74 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iii) 1979 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க இலங்கை மகாவலி அதிகாரச் சபைச் சட்டத்தின் 54(1) மற்றும் 54(2) ஆம் பிரிவுகளுடன் கீழ் நீர்ப்பாசன அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் 14 ஆம் திகதிய 2345/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(ii) கௌரவ உதயன கிரிந்திகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ சாரதீ துஷ்மந்த அவர்களுக்கு “என் கனவு யாழ் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ குமாரசிறி ரத்னாயக்க அவர்களுக்கு “எஸ் ஓ எஸ் சிறுவர் கிராம இலங்கை அமைப்பு (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) குறைநிரப்புத் தொகை — நிகழ்ச்சித்திட்டம் 01
(v) ஊழல்மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர் குழுவை நீக்குவதற்கான தீர்மானம்
அதனையடுத்து, 1805 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






