2023 நவம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-11-08 |
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2022 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் வருடாந்த அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பிரேமலால் ஜயசேக்கர
(ii) கௌரவ வருண லியனகே
(iii) கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி
(iv) கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன
(ii) கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
(iii) கௌரவ விஜித ஹேரத்
(iv) கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இலங்கை கிரிகெட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கூற்றொன்றினை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரொசான் ரணசிங்க அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டதுடன் 1 ஆம் இலக்க விடயம் விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.:-
(i) நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(ii) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(iii) ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“நகரத்தை அழகுபடுத்துவதற்கும் பராமரிப்பதற்குமான விசேட பிரிவு” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 09ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






