இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 நவம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-11-07

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
C : “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
D : “நிகழ்நிலைக் காப்பு” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
E : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்  
F : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
G : கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்     
H : கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்     
I  : பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக கௌரவ சபாநாயகர் அவர்களால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -      
•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும் ;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LII ஆம் பகுதியையும் ;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXIII பகுதியையும்; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XX, XXI மற்றும் XXII III ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XI மற்றும் XII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் IX மற்றும் X ஆம் பகுதிகளையும்

B.
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2022  ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXI, XXII, XXIII, XXIV மற்றும் XXV ஆம் பகுதிகள், நான்காம் தொகுதியின் VII மற்றும் VIII ஆம் பகுதிகள், ஐந்தாம் தொகுதியின் VI மற்றும் VII ஆம் பகுதிகள் மற்றும் ஆறாம் தொகுதியின் VI, VII மற்றும் VIII ஆம் பகுதிகள்

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ─
•    சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற இட நெருக்கடியை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான செயலாற்றல் கணக்காய்வு தொடர்பான  அறிக்கையின் எட்டாவது தொகுதியின் - III ஆம் பகுதி; மற்றும்
•    2020 ஜனவரி 01 தொடக்கம் 2022 மே 31 வரையான காலப்பகுதியினுள் தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியின் - IV ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான ஜய கன்டேனர் டர்மினல்ஸ் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(v)    2021 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆண்டறிக்கை
(vi)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2022 ஆம் ஆண்டுக்கான தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix)    2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல்  உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை

(x) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஒக்டோபர் 09 ஆம் திகதிய 2353/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்.
(xi)    2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.09.01 முதல் 2023.09.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xii)    1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, இலங்கை தேயிலைச் சபைச் சட்டத்தின் 13(1)(அ) மற்றும் 13(1)(ஆ) ஆம் பிரிவுகளின் கீழ் ஆய வரி தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 யூலை 04 ஆம் திகதிய 2339/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    பொது முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiv)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  தொழில் மற்றும் வெளிநாட்டுத் வேலைவாய்ப்பு அமைச்சின் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv)    வழிவகைகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(6) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “தெதிகம ஸ்ரீ மைத்திரீ பிரக்ஞார்த்த பௌத்த கல்வி தஹம் சபாவ (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

விஜித ஹேரத்    -     மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

வரி வருமானம் மற்றும் ஏனைய பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ நிதி இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

மீன்பிடிக் கைத்தொழிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக 2023.08.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க 

இலத்திரனியல் கார் இறக்குமதி தொடர்பாக ‘சதிய’ செய்தித்தாளின் தவறான அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

மத்தியஸ்தம் மீதான சிங்கப்பூர் சமவாயம் எனவறியப்படும் மத்தியஸ்தத்திலிருந்து விளைகின்ற சர்வதேசத் தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளின்மீது ஐக்கிய நாடுகள் சமவாயத்துக்குப் பயன்கொடுப்பதற்கும்; சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரிப்பதற்கும் வலுவுறுத்துவதற்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக

“மத்தியஸ்தத்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும்”

எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன. 1 ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-

(i)    தஸ்ஸனா பௌத்த சன்விதானய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii)    கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத்
(ii)    கௌரவ அகில எல்லாவல


அதனையடுத்து, 1719 மணியளவில் பாராளுமன்றமானது 2023 நவம்பர் 08ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom