இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-10-21

சட்டமூலங்கள் சமர்ப்பணம் கிராமோதய சபை நிதியம் (திருத்தம்) 1982 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, கிராமோதய சபை நிதியத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பிரேரித்தார். கெளரவ லலித் திஸாநாயக்க அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:- 1. அநுராதபுரம் ஸ்ரீ புஷ்பதான அபிவிருத்தி தர்ம ஸ்தாபனத்தைக் (கூட்டிணைத்தல்) 2. பலன புத்தர் சிலை அமைப்புச் சபையைக் (கூட்டிணைத்தல்) இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. (i) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 123, நிகழ்ச்சித்திட்டம் 2 (நகர அபிவிருத்தி, புனிதப் பகுதிகள் அபிவிருத்தி அமைச்சு) (ii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 105, நிகழ்ச்சித்திட்டம் 2 (தேசத்தைக் கட்டியெழுப்புதல், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு) (iii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 166, நிகழ்ச்சித்திட்டம் 2 (நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சு) (iv) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 117, நிகழ்ச்சித்திட்டம் 2 (நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு) ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'பித்தளை மற்றும் செம்பு தொழிற்சாலைகளைப் பாதுகாத்தல்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ என்.டீ.பி. ஜயசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1624 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஒக்டோபர் 22 ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom