2023 ஒக்டோபர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-10-19 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழுவின் கூட்டங்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் கொள்கலனுடைய நடமாடும் டீசல் மின்பிறப்பாக்கிகளின் கொள்வனவு மீதான செயலாற்றல் தொடர்பான கணக்காய்வு அறிக்கையின் - IV ஆம் பகுதி
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ(1) உறுப்புரையின் பிரகாரம், 2023 சனவரி தொடக்கம் யூலை வரையிலான காலப்பகுதிக்கான அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 ஒக்டோபர் 17 ஆம் திகதிய 2354/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், ஹொரைசன் கொலிஜ் ஒப் பிஸ்னஸ் டெக்னொலொஜி (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பவியலில் கல்வி இளமாணி (சிறப்பு) மற்றும் இலங்கை இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (கரன்டி) லிமிடெட் (SLIIT) தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூலை 12 ஆம் திகதிய 2340/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிடெட் (NSBM) நிறுவனத்தினால் வழங்கப்படும் போஷணையில் மற்றும் சுகாதாரத்தில் சிறப்பு விஞ்ஞான இளமாணி, இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தினால் (ICASL) வழங்கப்படும் தொழில் பகுப்பாய்விலில் முகாமைத்துவ இளமாணி சிறப்பு மற்றும் தொழில் பகுப்பாய்வியலில் முகாமைத்துவ இளமாணி மற்றும் றோயல் இன்ஸ்டிடியூட் கொழும்பு (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் உயிரி மருத்துவ விஞ்ஞானங்களில் கௌரவ இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூலை 17 ஆம் திகதிய 2341/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், சேஜிஸ் கம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் பொருள் ஏற்பாட்டியல் மற்றும் வழங்கீட்டு சங்கிலி முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவ இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூலை 25 ஆம் திகதிய 2342/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், பெனடிக்ட் XVI கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தினால் (பிறைவேட் லிமிடெட்) வழங்கப்படும் கணக்கியல் மற்றும் நிதியியலில் வணிக முகாமைத்துவ சிறப்பு இளமாணி மற்றும் முன் பிள்ளைப் பருவக் கல்வியில் சிறப்பு கல்வி இளமாணி மற்றும் சினெக் கெம்பஸ் (பிறைவேட் லிமிடெட்) நிறுவனத்தினால் வழங்கப்படும் விளையாட்டு மற்றும் உடற்கல்வியில் கௌரவ கல்வி இளமாணி மற்றும் சந்தைப்படுத்தலில் வணிக முகாமைத்துவத்தில் கௌரவ இளமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூலை 31 ஆம் திகதிய 2343/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், காட்சு - ஹைலி அட்வான்ஸ்ட் மெடிக்கல் டெக்னோலொஜி ட்றெயினிங் சென்ரர் (பிறைவேட்) லிமிடெட் (KIU) நிறுவனம் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் 15 ஆம் திகதிய 2345/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வெகுசன ஊடக அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரசாங்க அச்சகத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அரசாங்க தகவல் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தபால் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
கனிம மணல் வைப்புகளை ஒரு நிறுவனத்திடம் கையளித்தல்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ கைத்தொழில் அமைச்சர்அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 11 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(iv) நிதிச் சட்டத்தின் கீழ் இரண்டு அறிவித்தல்கள்
(v) நிதிச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(vi) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு அறிவித்தல்கள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ துஷார இந்துனில் அமரசேன
(ii) கௌரவ அகில எல்லாவல
அதனையடுத்து, 1807 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஒக்டோபர் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






