2023 ஒக்டோபர் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-10-18 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
A : (358 ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டம்
சபாநாயகரின் அறிவித்தல்கள்
B : பயங்கரவாதத்திற்கெதிரான சட்டமூலம் தொடர்பானது
C : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
D : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) “உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தல்) சட்டமூலம்” பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லலித் வர்ணகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ நிபுண ரணவக - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
மூன்றாவது தடவையாக மின் கட்டணத்தை உயர்த்த அரசாங்கத்தின் முயற்சி
(ii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
உலகப் போர்ச் சூழ்நிலையால் இலங்கைப் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பாதிப்பு
சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்
திருகோணமலை தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் 2023.10.17 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தையும் 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தையும் திருத்துவதற்கும்; 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஏற்புடைமையிலிருந்து குறித்தசில ஆட்களை விலக்களிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“நிதி”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) சிரேட்ட அறிவுறுத்தும் சட்டத்தரணிகள் என்ற கௌரவிப்பை அளித்தல் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பட்டய கணக்காளர் நிறுவனத்தினால் பரீட்சை நடத்தப்படும் மொழி” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பீ.வை.ஜி. ரத்னசேக்கர அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1632 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஒக்டோபர் 19ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






