2023 ஒக்டோபர் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-10-17 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகின்றமை தொடர்பானது
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
C : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
D : பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களுக்கான நேர ஒதுக்கீடு
E : தவிசாளர் குழாமை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுக்கான கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XL ஆம் பகுதியையும் ;
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XX ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXII ஆம் பகுதியையும்; மற்றும்
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVII, XVIII மற்றும் XIX ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் IX மற்றும் X ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் V மற்றும் VIII ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு.
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான உரிமைகள் காப்புறுதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான தேயிலை சக்தி நிதியின் ஆண்டறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (டாக்டர்) கயாஷான் நவனந்த
(ii) கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
மில்கோ மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை என்பன இந்தியாவின் அமோல் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளமை
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ ஹெக்டர் அப்புஹாமி
தன்னை மற்றும் கௌரவ நலீன் பண்டார ஜயமஹ ஆகியோரை சம்பந்தப்படுத்திய திவயின மற்றும் அருண செய்தி அறிக்கைகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்,— இலங்கையில் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி ஊக்குவிக்கும் பொருட்டு தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதன் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளை எடுத்துக் கூறுவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
“தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன. 3 ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது.:-
(i) உயிர்த்த ஞாயிறு தினம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய “செனல் 4” அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு
(ii) பலபிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக் ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(iii) ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரசாங்கக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும்” ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1638 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஒக்டோபர் 18ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






