இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-10-20

சட்டமூலங்கள் சமர்ப்பணம்

ஊழியர் சகாய நிதியம் (திருத்தம்)

1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, ஊழியர் சகாய நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ தொழில் உறவுகள், மனிதவலு அமைச்சர் பிரேரித்தார்.


கெளரவ கபீர் ஹாஷீம் அவர்களுக்கு "அல் - ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா அறாபி வித்தியாலயத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ ஆர். எம். ரஞ்ஜித் மத்துமபண்டார அவர்களுக்கு "லக் தெரண அபிவிருத்தி மன்றத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 15 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் பிரேரிக்கப்பட்டன:

(i) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 103, நிகழ்ச்சித்திட்டம் 1 (பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு)
சபையால் நிறைவேற்றப்பட்டது.

(ii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 222, நிகழ்ச்சித்திட்டம் 1 (பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு)
சபையால் நிறைவேற்றப்பட்டது.

(iii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 223, நிகழ்ச்சித்திட்டம் 1 (பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு)
சபையால் நிறைவேற்றப்பட்டது.

(iv) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 224, நிகழ்ச்சித்திட்டம் 1 (பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு)
சபையால் நிறைவேற்றப்பட்டது.

(v) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 225, நிகழ்ச்சித்திட்டம் 1 (பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு)
சபையால் நிறைவேற்றப்பட்டது.

(vi) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 320, நிகழ்ச்சித்திட்டம் 1 (பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு)
சபையால் நிறைவேற்றப்பட்டது.

(vii) இலங்கை பொருளியற் கழகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இரண்டாம் மதிப்பீடு சபையால் நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(viii) புலத்திசி தறுவோ மன்ற நம்பிக்கைப்பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இரண்டாம் மதிப்பீடு சபையால் நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ix) சிறிநிவெஸ் பிரஜாமித்ர சஹயோகியதா கேந்திரம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இரண்டாம் மதிப்பீடு சபையால் நிறைவேற்றப்பட்டு "ஏ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(x) ஹெம்டன் விலேஜ் இலங்கை நம்பிக்கைப் பொறுப்புச்சபை (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இரண்டாம் மதிப்பீடு சபையால் நிறைவேற்றப்பட்டு "பீ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(xi) மாளிகாவத்தை ஜனாஸா மற்றும் நலன்புரிச் சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இரண்டாம் மதிப்பீடு சபையால் நிறைவேற்றப்பட்டு "பீ" நிலையியற்குழு (சட்டவாக்கம்) விற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(xii) கிராமிய வேலையாட்கள் மற்றும் ஒன்றிணைந்த கிராமிய வளங்கள் அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது.

(xiii) இலங்கை புற்றுநோய் ஆராய்ச்சி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது.

(xiv) சமூக நிவாரண மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது.

(xv) பிரேமதாச ஹேகொட மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
பரிசீலனைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"வரட்சி நிவாரணம் - மொனராகல மாவட்டம்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஒக்டோபர் 21 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom