இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஒக்டோபர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-10-06

குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்   
B : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் 


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2021 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஆண்டறிக்கையும் நிதிசார் கூற்றுக்களும்
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் படையணியின் ஆண்டறிக்கை    
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(iv) 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.08.01 முதல் 2023.08.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

பொஸ்பேட் ஏற்றுமதி மற்றும் இதர தொடர்புபட்ட பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

மின்னியல் வாகனங்களை ஒருங்கு சேர்ப்பதற்கான வரிச்சலுகையை வழங்கல் தொடர்பாக 2023.10.05 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

(i)    கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி பாராளுமன்றத்திலுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுவில் தன்னை அச்சுறுத்தியமை

(ii) கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா  

‘மல்டி கெமிக்கல்’ குழும நிறுவனங்களின் தலைவர் செல்வி கயானி ஜயரத்னவினால் அரசாங்க நிதிக் குழு தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதம்


கௌரவ வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023  சனவரி மாதம் 19 ஆம் திகதி மற்றும்  2023  யூன் மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024 சனவரி 18 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கௌரவ (திருமதி) டயனா கமகே அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 ஒக்தோபர் 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ இரான் விக்கிரமரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஒக்டோபர் 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom