இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஒக்டோபர் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-10-04

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்  


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

A.    2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டு, நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு மதிப்பீடு

B.    
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XV, XVI, XVII, XVIII, XIX மற்றும் XX ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் III, IV, V மற்றும் VI ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் IV மற்றும் V ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் III, IV மற்றும் V ஆம் பகுதிகள்
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பத்தாவது தொகுதியின் தவறான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட அல்லது ஒன்று சேர்க்கப்பட்ட வாகனங்களின் செசி இலக்கம் மற்றும் இன்ஜின் இலக்கத்தை மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் தரவு முறைமைக்குள் மோசடியாக தரவுகளை உள்ளடக்கி மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வது போலியான சான்றிதழ்களை வழங்குவது தொடர்பான 2022 இன் விசேட கணக்காய்வு அறிக்கையின் - III  ஆம் பகுதி


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ மதுர விதானகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பியங்கர ஜயரத்ன
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

மாத்தறையில் நில்வலா ஆற்றின் குறுக்கே உப்புத்தன்மை தடுப்பு மற்றும் வெள்ள நிலைமை


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    சுகாதாரத் துறையில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக 2023.08.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் பதிலளித்தார்.
(ii)    சர்வதேச நாணய நிதியத்தினால் நீடிக்கப்பட்ட நிதி வசதி, வரிக் கொள்கைகள் போன்றவை தொடர்பாக 2023.10.03 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர ஆகியோர் பதிலளித்தனர்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 3 முதல் 9 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-

(i)    இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்புச் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழான இரண்டு தீர்மானங்கள்
(iii)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான நான்கு கட்டளைகள்
(iv)    அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
(ii)    கௌரவ இம்ரான் மஹ்ரூப்


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஒக்டோபர் 05ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom