2023 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-09-19 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
C : புதிய பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும் நியமனம்
D : “சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
E : “ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சமிதிய (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்
F : "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்" தொடர்பாக இலங்கை பொலிசாரினால் நடத்தப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2009 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாது தொகுதியின் I ஆம் பகுதியையும் ;
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LI ஆம் பகுதியையும் ;
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXIX ஆம் பகுதியையும்;
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLI ஆம் பகுதியையும் மற்றும் XLII ஆம் பகுதியையும்; மற்றும்
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் X, XI, XII, XIII, XIV, XV மற்றும் XVI ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் V, VI, VII மற்றும் VIII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் VI மற்றும் VII ஆம் பகுதிகளை
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியினது 2022 சர்வதேச கிரிக்கெட் சபையின் T-20 உலகக் கிண்ண (ஆண்கள்) கிரிக்கெட் போட்டி தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையின் - II ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் (ஒம்புட்ஸ்மன்) வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான சிரம வாசனா நிதியத்தின் ஆண்டறிக்கை
(v) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதர உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 மே 17 ஆம் திகதிய 2332/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதர உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 மே 20 ஆம் திகதிய 2332/53 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் பதில் நிதி, பொருளாதர உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 யூன் 22 ஆம் திகதிய 2337/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதர உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2023 யூன் 13 ஆம் திகதிய 2340/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2023 யூன் 16 ஆம் திகதிய 2336/72 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(x) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2023 யூன் 30 ஆம் திகதிய 2338/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(xi) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2023 யூலை 21 ஆம் திகதிய 2341/64 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(xii) திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 107அ(1) ஆம் பிரிவின் சுங்கத் தீர்வை தொடர்பில் நிதி, பொருளாதர உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 ஏப்ரல் 28 ஆம் திகதிய 2329/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 27, 36, 37, 39, 40 மற்றும் 64 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவினதும் இயைபான ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளினதும் கலந்தாலோசனையுடன், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூலை 07 ஆம் திகதிய 2339/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 செப்டெம்பர் 12 ஆம் திகதிய 2349/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) பொது மக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டிரான் அலஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) அரசாங்க நிதி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vi) உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை 1 அக்குழுவின் தவிசாளர் கௌரவ டீ. வீரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vii) உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை 2 அக்குழுவின் தவிசாளர் கௌரவ டீ. வீரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
(ii) கௌரவ டீ. வீரசிங்க
(iii) கௌரவ ஜகத் சமரவிக்ரம
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
சமூக ஊடகங்களை ஒடுக்கும் சட்டமூலம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i) ஆட்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ சட்டத்தரணி வஸந்த யாபாபண்டார
(ii) கௌரவ நாலக பண்டார கோட்டோகொட
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 செப்டெம்பர் 20ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






