2023 செப்டெம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-09-07 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VI, VIII, IX, X, XI, XII, XIII மற்றும் XIV ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் I, II மற்றும் III ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் II ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு, பேரிடர் மேலாண்மை பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை பொலிஸ், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் இலங்கை விமானப் படை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.07.01 முதல் 2023.07.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ அனுப பஸ்குவல் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை 1 அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் குமார சுமித்தராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை 2 அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜகத் குமார சுமித்தராரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
மதுபானக் கடைகளை திறத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ நிதி இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் விவாதிக்கப்பட்டது. 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் 1 ஆம் இலக்க விடயம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.:-
(i) சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
(ii) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன் - இரண்டாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 103; எதிராக 58)
(iii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம்
அதனையடுத்து, 1917 மணியளவில் பாராளுமன்றமானது 2023 செப்டெம்பர் 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






