இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து இளம் தலைவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

திகதி : 2023-09-06

ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து இளம் தலைவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செலயலமர்வொன்று அண்மையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து பவ்ரல் அமைப்பு இந்த செயலமர்வுக்கான இளம் தலைவர்களைத் தெரிவுசெய்திருந்தது. சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயலமர்வில் பிரதான வளவாளராக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீர கலந்துகொண்டார்.

ஜனநயகம் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்வதற்கான இலங்கை முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்துள்ள நூற்றுக்கும் அதிகமான இளம் தலைவர்களின் ஆர்வத்தைப் பாராட்டுவதாக செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார். பாராளுமன்றம் தொடர்பில் சரியான தகவல்களை அடிமட்டத்தில் உள்ள மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் இளம் தலைவர்களுக்குப் பாரிய பங்கு இருப்பதாக செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன,  சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜனகாந்த சில்வா, பாராளுமன்ற நிர்வாகப் பணிப்பாளர் தட்சணா ராணி ஆகியோர் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து இளம் தலைவர்களுக்கு விளக்கமளித்தனர்.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவு பவ்ரல் அமைப்புடன் இணைந்து இளைஞர் சமூகத்தினை விழிப்புணர்வூட்டும் செயலமர்வுத் தொடரின் ஓர் அம்சமாக இது அமைந்திருந்தது.

 

1 5

7 2

12 3

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom