2023 செப்டெம்பர் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-09-06 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தைத் தாபிப்பதற்கான கூட்டம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
சிறப்புரிமைகள்
(i) பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 ஆகஸ்ட் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
(ii) பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 யூலை 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ஹர்ஷண ராஜகருணாஅவர்களுக்கு “ஹேஷா சிநேகபூர்வ மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்கள்) பின்வரும் விடயங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. 1 முதல் 3 வரையான விடயங்கள் அங்கீகரிக்கப்பட்டதுடன் 4 முதல் 6 வரையான விடயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.:-
(i) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம்
(iv) சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
(v) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vi) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2023 செப்டெம்பர் 07ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






