இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஆகஸ்ட் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-08-25

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “இதயத்துடன் இதய நம்பிக்கை பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மேலதிக உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய கணக்காய்வுகள் அலுவலகம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தான அறிக்கை
(ii)    1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 19(அ) ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான சுங்கத் தீர்வை அறவீடு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்  தேசியக் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் 11 ஆம் திகதிய 2344/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii)    2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் 222 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 527 ஆம் பிரிவின் கீழ் கைத்தொழில்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2023 மார்ச் 17 ஆம் திகதிய 2323/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா                    
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ விபத்திற்கான இழப்பீடு, முதலியன பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை தொடர்பாக கூற்றொன்றினை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்தார்.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த

தங்கம் மற்றும் மொபைல் போன்கள் கடத்தல் தொடர்பிலான கௌரவ அலி சப்ரி ரஹீம், பா.உ. அவர்களின் நடத்தை


அனுதாபப் பிரேரணைகள்

பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i)    மறைந்த கௌரவ எஸ்.ஏ.ஆர். மத்துமபண்டார
(ii)    மறைந்த கௌரவ பீ. சிறிசேன குறே
(iii)    மறைந்த கௌரவ (வண.) உடவத்தே நந்த தேரோ


அதனையடுத்து, 1432 மணியளவில் பாராளுமன்றமானது 2023 செப்டெம்பர் 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom