2023 ஆகஸ்ட் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-08-22 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
“நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல்” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
C : அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்
D : இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆண்டறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூன் 28 ஆம் திகதிய 2338/40 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூலை 20 ஆம் திகதிய 2341/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், கலம்போ இன்டர்நஷனல் நோட்டிக்கல் அன்ட் என்ஜினியரிங் கொலெஜ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் (சினெக்) வழங்கப்படும் உயிரியல் விஞ்ஞானத்தில் கௌரவ கல்வி இளமாணி, ஆங்கிலத்தில் கௌரவ கல்வி இளமாணி, பௌதீக விஞ்ஞானத்தில் கௌரவ கல்வி இளமாணிப் பட்டம் மற்றும் நஷனல் ஸ்கூல் ஒப் பிஸினஸ் மனேஜ்மென்ட் லிமிடெட்டினால் வழங்கப்படும் சட்டமாணி சிறப்பு தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 பெப்ரவரி 20 ஆம் திகதிய 2320/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், பெனடிக்ட் XVI கத்தோலிக்க உயர்கல்வி நிறுவகம் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஆரம்பக் கல்வியில் சிறப்பு கல்வி இளங்கலைமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஏப்ரல் 03 ஆம் திகதிய 2326/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், றோயல் இன்ஸ்டிடியூட் ஒஃப் கொழும்பு (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் இரண்டாம் மொழியொன்றாக ஆங்கிலம் கற்பித்தலில் கல்வி கௌரவ இளமாணி மற்றும் ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒப் இன்போமேஷன் டெக்னொலொஜி (உத்தரவாதம்) லிமிடெட் (SLIIT) நிறுவனத்தினால் வழங்கப்படும் கல்வி முதுமாணி மற்றும் கற்கைநெறிப் பணியுடனான கல்வி முதுமாணி தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஏப்ரல் 28 ஆம் திகதிய 2329/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xi) 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, குடியியல் வான்செலவுச் சட்டத்தின் 6, 10, 11, 26, 31(ஈ), (உ),(ஊ),(எ) மற்றும் (ஏ) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 117(2)(ஞ) பிரிவின் கீழ் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஏப்ரல் 03 ஆம் திகதிய 2326/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xii) 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, ஆட்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் 52 ஆம் பிரிவின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் 2023 ஆகஸ்ட் 09 ஆம் திகதி ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்)(திருத்தம்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விதுற விக்கிரமநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சனத் நிசாந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக, அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக்க பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vi) மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vii) உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டீ. வீரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(viii) ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லலித் வர்ணகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ காமினி லொக்குகே
(ii) கௌரவ தயாசிறி ஜயசேக்கர - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ புத்திக பத்திறண
(iv) கௌரவ நாலக பண்டார கோட்டேகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
கடுமையான வறட்சி நிலை தொடர்பான பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு முறையே கௌரவ நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர், கௌரவ கமத்தொழில் அமைச்சர் மற்றும் கௌரவ நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோர் பதிலளித்தனர்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
‘லைகா’ குழுமத்திற்கு ‘செனல் ஐ’ ஒளிபரப்பு நேரத்தினை குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, இலங்கைத் துறைமுக அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“இலங்கைத் துறைமுக அதிகாரசபை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 2ஆம் விடயமாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஆகஸ்ட் 23ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






