இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஆகஸ்ட் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-08-11

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் 


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
•    2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLVII ஆம் பகுதியையும் ;
•    2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் L ஆம் பகுதியையும் ;
•    2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் L ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVIII ஆம் பகுதியையும்;
•    2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXI ஆம் பகுதியையும்; மற்றும்
•    2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் V, VI, VII, VIII மற்றும் IX ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் II, III மற்றும் IV ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் II, III மற்றும் IV ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கைகள்
(ii)    2019/2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான  பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றல் அறிக்கை

(iv) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின்     3(4) ஆம் பிரிவின் கீழ் வெல்கம் ஹோட்டல்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் தொடர்பில் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூலை 04 ஆம் திகதிய 2339/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ தாரக்க பாலசூரிய

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தின் விலைமனு நடைமுறை

மேற்சொன்ன வினாவிற்கு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பராடே அதிகாரங்கள் மற்றும் குத்தகை சட்டம் தொடர்பாக கூற்றொன்றினை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் முன்வைத்தார்.


கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு

இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023 மே 12 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2024 பெப்ரவரி 20 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-

•    உள்ளூராட்சி நிறுவனங்களினால் கழிவகற்றப்படுதல்

இலங்கையில் பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் கழிவுகளை அகற்றும் பொறுப்பினை இன்றளவில் தனியார் கம்பனிகளுக்குக் கையளித்துள்ளமையின் காரணமாக,  வரி செலுத்தும் மக்களது பெருந்தொகை நிதி குறிப்பிட்ட கம்பனிகளைச் சென்றடைவதனால், குறித்த பணிகளை குறிப்பிட்ட உள்ளூராட்சி  நிறுவன ஊழியர்களை ஈடுபடுத்தி  மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

•    மன்னன் இராவணன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல்

மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதிலும், முறைசார்ந்த ஆய்வொன்றின் மூலம் அவர் தொடர்பாக நாட்டு மக்களின் மனப்பாங்கினை மேம்படுத்துவதற்கும் மன்னன் இராவணனுக்கு இருந்த அறிவினை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கும், இலங்கை வரலாற்றில் மறைந்துபோயுள்ள அத்தியாயமொன்றை வெளிக்கொண்டு வருவதற்கும் இயலுமாயுள்ளதால் புத்திஜீவிகள் குழுவொன்றின் மூலம் மன்னன் இராவணன் தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் வினாவொன்று கேட்கப்பட்டது:-

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன 


அதனையடுத்து, 1441 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஆகஸ்ட் 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom