இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஆகஸ்ட் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-08-10

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “ஆயுர்வேத (திருத்தம்)” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு 


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான மில்கோ (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை

(iii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 52 மற்றும் 53 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71 ஆம் பிரிவின் கீழ்  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் 04 ஆம் திகதிய 2343/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நீர்ப்பாசன அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தான அறிக்கை


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக 2023.06.22 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி அவர்கள் பதிலளித்தார்.
(ii)    இலங்கையில் வாழும் பழங்குடி மக்கள் தொடர்பாக கூற்றொன்றினை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக அவர்கள் முன்வைத்தார்.
(iii)    கோழி வளர்ப்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கூற்றொன்றினை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நலின் பிரனாந்து அவர்கள் முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ ஹர்ஷண ராஜகருணா அவர்களுக்கு “ஜனரஜ மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii)    கெளரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி அவர்களுக்கு “இலங்கை போசணை மருத்துவர்கள் கல்லுரி (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ மனோ கணேசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஆகஸ்ட் 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom