இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-08-09

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : கௌரவ ஹரின் பிரனாந்து அவர்களின் சிறப்புரிமை தொடர்பான தீர்ப்பு
B : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்  
C : தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தைத் தாபிப்பதற்கான கூட்டம்


கௌரவ சனாதிபதி அவர்களின் விசேட உரை

அரசியலமைப்பிற்கான பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் விசேட கூற்றொன்றினை முன்வைத்தார்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை எச்டிஎப்ஃசீ வங்கியின் ஆண்டறிக்கை
(iii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் - செலவுத் தலைப்பு இல. 04 இன் செயலாற்றுகை அறிக்கை
(vii)    2021 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(viii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்கும்
(ix)    2021 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகக் கணனிக் கல்லூரியின் ஆண்டறிக்கை
(x)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை காணிகள் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(xi)    2022 ஆம் ஆண்டுக்கான விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xii)    2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க தகவல் திணைக்களத்தின் வருடாந்த  செயலாற்றுகை அறிக்கைகள்
(xiii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xiv)    2022 ஆம் ஆண்டுக்கான காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvi)    2022 ஆம் ஆண்டுக்கான பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xviii)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பொறியியற் பேரவையின் ஆண்டறிக்கை
(xix)    2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(xx)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மகாவலி அதிகாரசபையின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக, அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக்க பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பியல் நிசாந்த த சில்வா                    
(ii)    கௌரவ மிலான் ஜயதிலக்க                    
(iii)    கௌரவ கிங்ஸ் நெல்சன்                    
(iv)    கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார                    
(v)    கௌரவ யதாமிணீ குணவர்தன                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

மீன்பிடிக் கைத்தொழிலுள்ள பிரச்சினைகள்

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

கமத்தொழில் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

‘அஸ்வெசுமா’ நலன்புரி உதவி செலுத்தும் திட்டம் தொடர்பாக 2023.08.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய அவர்கள் பதிலளித்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2023 யூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம்
(iii)    கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் ஐந்து ஒழுங்குவிதிகள்
(iv)    இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“கோழி வளர்ப்பு மற்றும் ‘பீடி’ தொழிலில் நிலவும் பிரச்சினைகள்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கபீர் ஹஷீம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1719 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஆகஸ்ட் 10ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom