இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஆகஸ்ட் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-08-08

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

B : ““பிரதேச சபைகள் (திருத்தம்)”, “நகர சபைகள் (திருத்தம்)” மற்றும் “மாநகர சபைகள் (திருத்தம்)”” சட்டமூலங்கள் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு  
C : ““கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)”” சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு  
D : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்  
E : “இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில்” சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
F : கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்        
G : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IV, V மற்றும் VII ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் I ஆம் பகுதி
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது—
•    ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் உற்பத்தி மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் அரச நிறுவனங்களின் பணிப்பொறுப்பினை மதிப்பீடு செய்தல் தொடர்பிலான செயலாற்றுகை மற்றும் சுற்றாடல் கணக்காய்வு அறிக்கையின் – I ஆம் பகுதி; மற்றும்
•    இலங்கையின் வலுவான மீளத்தக்க தேசிய பொது சுகாதார முறைமை (நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் 3(ஈ) தொடர்பானது) நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான கணக்காய்வு செய்தல் தொடர்பாக செயன்முறைப்படுத்தல் வலயத்தை தோற்றுவிக்கும் நடைமுறையின் செயலாற்றலை மதிப்பீடு செய்தல் தொடர்பிலான செயலாற்றுகை மற்றும் சுற்றாடல் கணக்காய்வு அறிக்கையின் – II ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான வளிமண்டலவியல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு  நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2022 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix)    2022 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசன அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(x) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 யூன் 16 ஆம் திகதிய 2336/71 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.06.01 முதல் 2023.06.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xii)    2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகுதிளைச் சார்ந்த பிணக்குகள்) சட்டத்தின் 4 (2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட வேண்டிய 27 ஆம் பிரிவின் கீழ் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2023 சனவரி 14 ஆம் திகதிய 2314/80 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiii)    1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் 29அ(2) ஆம் பிரிவின் கீழ், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு,  2023 ஏப்ரல் 21 ஆம் திகதிய 2328/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “இலங்கை பட்டயக் கப்பல்தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி டபிள்யூ.டீ.ஜே. செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக, அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய                    
(ii)    கௌரவ வாசுதேவ நாணாயக்கார                    
(iii)    கௌரவ அஜித் மான்னப்பெரும
(iv)    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க                    
(v)    கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ
(vi)    கௌரவ பிரேமலால் ஜயசேக்கர                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

‘அஸ்வெசுமா’ நலன்புரி உதவி செலுத்தும் திட்டம்

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

உடவலவ விவசாய வலயத்தில் நீர் பிரச்சினை

மேற்சொன்ன வினாவிற்கு நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) - 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii)    இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு - இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு எனவழைக்கப்படும் நம்பிக்கைப் பொறுப்பொன்றைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; கண் அறுவைச் சிகிச்சைக்காகவும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்விக்காகவும் தேவைப்படும் விழிவெண்படல இழையங்களையும் செயற்கையான சாதனங்களையும் மற்றும் வேறு இழையங்களையும் வழங்குவதற்கும்; கண் அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் மிகையான விழிவெண்டல இழையங்களையும் வேறு இழையங்களையும் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு எற்பாடு செய்வதற்கானது
(iv)    குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) - (101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையினைத் திருத்துவதற்கானது
(v)    தோ்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) - ஒரு தோ்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும் குற்றப் பணங்களை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைத் தோ்தல்கள் கட்டளைச் சட்டத்தையும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்றத் தோ்தல்கள் சட்டத்தையும், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, சனாதிபதித் தோ்தல்கள் சட்டத்தையும்; மற்றும் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாணசபைத் தோ்தல்கள் சட்டத்தையும் திருத்துவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக எற்பாடு செய்வதற்கானது
(vi)    சிரேட்ட அறிவுறுத்தும் சட்டத்தரணிகள் என்ற கௌரவிப்பை அறித்தல் - சட்டத் தொழிலில் உயர் புகழையும் உயர் தராதரத்தினையும் வெளிப்படுத்தி அறிவுறுத்தும் சட்டத்தரணிகளாக தொழில்புரிகின்ற சட்டத்தரணிகளால் வழங்கப்பட்ட சேவையை ஏற்றங்கீகரித்து பாராட்டும் நோக்குடன் சிரேட்ட அறிவுறுத்தும் சட்டத்தரணிகள் என்ற கௌரவிப்பை அளிப்பதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கும் எற்பாடு செய்வதற்கானது


ஒத்திவைப்புப் பிரேரணை

“2023 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1657 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஆகஸ்ட் 09ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom