இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023 ஜூலை 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-07-18

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்   
B : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல் 

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை
(ii)    2021 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான தபால் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான வெகுசன ஊடக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2020 ஆம் ஆண்டுக்கான  இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(vi)    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவகத்தின் ஆண்டறிக்கைகள்
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொலிஸின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2020 ஆம் ஆண்டுக்கான லங்கா சதொச லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை.
(ix)    2021 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கையும் ஆண்டுக் கணக்குகளும்

(x)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ்,  நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 யூன் 14 ஆம் திகதிய 2336/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள்
(xi)    (276 ஆம் அத்தியாயமான) கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சரின் ஒருமைப்பாட்டுடன் கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவையினால் ஆக்கப்பட்டு, 2023 மே 15 ஆம் திகதிய 2332/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட  விதிகள்

குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விதுற விக்கிரமநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பியல் நிசாந்த த சில்வா                   
(ii)    கௌரவ அநுர திசாநாயக்க                   
(iii)    கௌரவ நிமல் லான்சா                   
(iv)    கௌரவ (டாக்டர்) கயாஷான் நவனந்த                   
(v)    கௌரவ நிமல் பியதிஸ்ஸ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

சுகாதாரத் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

தனிப்பட்ட விளக்கங்கள்

கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் குறித்த தனது நிலைப்பாடு பற்றி கௌரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கூற்று

சட்டமூலங்கள் சமர்ப்பணம்

நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் தொடர்பான சட்டத்தை ஒரு சீராக ஏற்புடையதாக்குவதற்காக ஏற்பாடுசெய்வதற்கும்; நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதிப்பதற்குத் தண்டனையளிப்பதிலான நடவடிக்கைமுறைக்காக ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக

“நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல்”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.

கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i)    இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 மே 12 மற்றும் 2023 யூன் 09 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகள் என்பனவற்றினால் தடைபெறாமல், இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவானது, சபாநாயகரால் நியமிக்கப்படுகின்ற இருபத்து மூன்று (23) உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(ii)    அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 சனவரி 19 மற்றும் 2023 யூன் 20 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகள் என்பனவற்றினால் தடைபெறாமல், அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவானது, சபாநாயகரால் நியமிக்கப்படுகின்ற பதினேழு (17) உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ இரான் விக்கிரமரத்ன அவர்களுக்கு “விசேட வியாபாரப்பண்ட அறவீடு (திருத்தச்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட கருமங்களை விசாரிப்பதற்கும் அது தொடர்பாக பொருத்தமான விதப்புரைகளை மேற்கொள்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு

ஒத்திவைப்புப் பிரேரணை

“தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.

அதனையடுத்து, 1710 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூலை 19ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கெளரவ இரான் விக்கிரமரத்ன அவர்களுக்கு விசேட வியாபாரப்பண்ட அறவீட்டுச் சட்ட (திருத்தச்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)      சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்

(ii)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(iii)   பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட கருமங்களை விசாரிப்பதற்கும் அது தொடர்பாக பொருத்தமான விதப்புரைகளை மேற்கொள்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு

ஒத்திவைப்புப் பிரேரணை

தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.

அதனையடுத்து, 1710 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூலை 19ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom