2023 ஜூலை 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-07-07 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
B : நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்
C : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2022 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் (இதழ் I - பொதுக்கல்வி, இதழ் II - உயர் கல்வி மற்றும் இதழ் III - திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் பற்றிய) வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்)” சட்டமூலம் பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கை மற்றும் கூட்ட அறிக்கை அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜயந்த சமரவீர
(ii) கௌரவ யதாமிணீ குணவர்தன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாஸ
பீப்பிள்ஸ் லீசிங் கம்பனியினால் பெஸ்ட் கெபிடல் ஹோல்டிங்ஸ் கம்பனியின் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளமை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 21 மற்றும் 22 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) வானூர்திமூலம் ஏற்றிச்செல்லல் (திருத்தச்) சட்டமூலம்
(ii) மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தோட்ட வீடுகள் மற்றும் வரிசை வீடுகளுக்கான முகவரிகளை வழங்குவதற்கான முறையொன்றினை ஏற்படுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வருண லியனகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1643 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூலை 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






