பாராளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சல் வசதிகளுக்காக புதிய முத்திரை வெளியீடு |
திகதி : | 2023-07-06 |
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சல் நடவடிக்கைகளுக்கான 50 ரூபாய் பெறுமதியான புதிய முத்திரை வெளியீடு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற நூலகத்தில் இன்று (ஜூலை 06) இடம்பெற்றது.
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால் இந்த முத்திரை வெளியிடப்பட்டதுடன் இதன் மூலம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பலதரப்பட்ட அஞ்சல் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் கௌரவ சாந்த பண்டார, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தபால்மா அதிபர் எம்.ஆர்.பி. சத்குமார உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











