2023 ஜூலை 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-07-05 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : குழுக்களின் கூட்டங்களுக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரசன்னமாதல் தொடர்பான தீர்ப்பு
B : இணைந்த விசேட பொதுக் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கைகள்
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(viii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ix) 2021 ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்நுட்பவிலுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(x) 2022 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi) 2021 ஆம் ஆண்டுக்கான கூட்டாட்சி முகாமைத்துவ அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(xii) 2021 ஆம் ஆண்டுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(xiii) 2022 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2015, 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள் மற்றும் கணக்கறிக்கைகள்
(xv) 2022 ஆம் ஆண்டுக்கான காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvi) 2022 ஆம் ஆண்டுக்கான காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvii) 2022 ஆம் ஆண்டுக்கான மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xviii) 2022 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xix) 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை
(xx) 2022 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxi) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2023 மார்ச் 28 ஆம் திகதிய 2325/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(xxii) 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2023.05.01 முதல் 2023.05.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xxiii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் 61(1)(தஎ), (தஏ) மற்றும் (ந) ஆம் பிரிவுகளின் கீழ் கடற்றொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2022 டிசம்பர் 15 ஆம் திகதிய 2310/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxiv) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 பெப்ரவரி 01 ஆம் திகதிய 2317/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxv) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் 61(1)(தஉ) ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 பெப்ரவரி 13 ஆம் திகதிய 2319/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxvi) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 பெப்ரவரி 13 ஆம் திகதிய 2319/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxvii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் 61(1)(ப) ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 பெப்ரவரி 13 ஆம் திகதிய 2319/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxviii) (188 ஆம் அத்தியாயமான) 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 46 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 47(1) ஆம் பிரிவின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 மே 25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் பிரசன்ன ரணவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லலித் வர்ணகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி
(ii) கௌரவ காமினி லொக்குகே
(iii) கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி
(iv) கௌரவ புத்திக பத்திறண
(v) கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாஸ
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையில் நிலவும் முறைகேடுகள்
மேற்சொன்ன வினாவிற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ (வண.) ரதன தேரர்
மின் மற்றும் வலுசக்தி துறையிலுள்ள பிரச்சினைகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தைத் திருத்துவதற்காக
“கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ கடற்றொழில் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
(ii) 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, ஆயுள்வேதச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“ஆயுள்வேதம் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ஜயந்த கெட்டகொட அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
(i) பிரதேச சபைகள் (திருத்தம்)
(ii) நகர சபைகள் (திருத்தம்)
(iii) மாநகர சபைகள் (திருத்தம்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2019)
(ii) இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(iii) காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் வருடாந்த அறிக்கை (2020)
(iv) காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் வருடாந்த அறிக்கை (2021)
(v) குற்றத்தால் பலியானவர்களையும் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2021)
(vi) இலங்கை தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை (2019)
(vii) இலங்கை தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை (2020)
(viii) இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை (2020/2021)
ஒத்திவைப்புப் பிரேரணை
“நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூலை 06ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






