2023 ஜூன் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-06-23 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : பின்வரிசைக் குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஆண்டறிக்கை
(ii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக் காட்சிச்சாலைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தான அறிக்கை
(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தான அறிக்கை
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது இலங்கை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழத்தில் மருத்துவ பீடத்தில் கற்கைப் பிரிவுகளை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2023 மார்ச் 20 ஆம் திகதிய 2324/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
“இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்)” சட்டமூலம் பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா
(ii) கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார
(iii) கௌரவ சம்பத் அதுகோரல - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ (திருமதி) லரீன் பெரேரா
(ii) மறைந்த கௌரவ ரெஜினோல்ட் குரே
(iii) மறைந்த கௌரவ புத்திக குருகுலரத்ன
(iv) மறைந்த கௌரவ முத்து சிவலிங்கம்
அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூலை 4ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






