2023 ஜூன் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-06-21 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கையும் கணக்கு அறிக்கையும்
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர மாவட்டச் செயலகத்தின் செயற்திறன் அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த கல்வி பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(vii) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை
(ix) 2022 ஆம் ஆண்டுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(x) 2022 ஆம் ஆண்டுக்கான வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 19(அ) பிரிவின் கீழ் தீர்வை விலக்களிப்புக்கள் தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2023 மே 30 ஆம் திகதிய 2334/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பிரசன்ன ரணதுங்க
(ii) கௌரவ கனக ஹேரத்
(iii) கௌரவ பிரேமலால் ஜயசேக்கர
(iv) கௌரவ நிபுண ரணவக்க - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
வெகுஜன ஊடகங்களை ஒழுங்குறுத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையில் பிரேரிக்கப்பட்டதுடன் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்கள் தொடர்பான விவாதம் எதிர்வரும் தினத்தொன்றுக்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன் 3 மற்றும் 4 ஆம் இலக்க விடயங்கள் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்
(iv) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
அதனையடுத்து, 1739 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூன் 22ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






