2023 ஜூன் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-06-20 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : பின்வரிசைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2020 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும் ;
• 2021 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும் ; மற்றும்
• 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I, II மற்றும் III ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019/2020 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட றக்னா ஆரக்ஷக லங்காவின் வருடாந்த ஆண்டறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2022 ஆம் ஆண்டுக்கான அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 13 ஆம் பிரிவின் பிரகாரம், 2022 இன் இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை அறிக்கை
(viii) 2021 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவில்ய மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ix) 2021 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேதத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(x) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(xi) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(xii) 2012/2013, 2013/2014 மற்றும் 2014/2015 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கைகள்.
(xiii) 2022 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் அமைச்சின் வருடாந்தச் செயலாற்றுகை அறிக்கை
(xiv) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கை
(xv) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2023 யூன் 17 ஆம் திகதிய 2336/78 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் இரண்டாவது அறிக்கை பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் தவிசாளர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா
(ii) கௌரவ உதயன கிரிந்திகொட - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ யதாமிணீ குணவர்தன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
உரம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நெல் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பராளுமன்ற விசேட குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் ஏற்பாடுகளினாலும் 2023 ஜனவரி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல், அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பராளுமன்ற விசேட குழுவானது, சபாநாயகரால் நியமிக்கப்படுகின்ற பதினைந்து (15) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக
(ii) இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவானது தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2023 ஏப்ரல் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லையானது பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2023 யூலை 21 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் 2 ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-
(i) பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii) பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக்ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பாடசாலைகளில் சமயக் கல்வியை மேம்படுத்துதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ குமாரசிறி ரத்னாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1653 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூன் 21ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






