2023ஜூன் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-06-09 |
பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை எச்டிஎப்சீ வங்கியின் ஆண்டறிக்கை
(ii) 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2022 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2022 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2022 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vii) 2022 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii) 2022 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஆண்டறிக்கைகள்
(x) 2022 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(xi) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்
(xii) 2019/2020 ஆம் ஆண்டுக்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(xiii) 2021/2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xiv) 2022 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ டீ. வீரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) தேசிய பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேரகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ தயாசிறி ஜயசேக்கர
(ii) கௌரவ இசுரு தொடன்கொட
(iii) கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 மே 12 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல், இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவானது, சபாநாயகரால் நியமிக்கப்படுகின்ற இருபது (20) உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ இரான் விக்கிரமரத்ன அவர்களுக்கு “சோ்பெறுமதி வரி (திருத்தச்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-
• சகல அரச நிறுவனங்களையும் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் நிலையப்படுத்தல்
பொது மக்களின் வரிப் பணத்தில் பேணப்படுகின்ற அரச நிறுவனங்களை தனியார் கட்டடங்களில் நிலையப்படுத்துவதன் மூலம் பெருந்தொகை பணம் வீணாக செலவாவதாலும், மேற்படி நிறுவனங்களை அரச கட்டடங்களில் நிலையப்படுத்துவதன் மூலம் பெருமளவு பணத்தை சேமிக்க முடியுமென்பதாலும், சகல அரச நிறுவனங்களையும் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் மாத்திரம் நிலையப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• பயிர்களை சேதப்படுத்துகின்ற மந்திகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல்
இலங்கையில் விவசாயப் பயிர்களுக்கு வன விலங்குகளினால் பெரும் சேதங்கள் ஏற்படுவதாலும், ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி, பயிற்சி நிறுவகத்தின் அறிக்கைகளின் பிரகாரம் விலங்குகளால் ஏற்படுகின்ற பயிர்ச் சேதமானது வருடாந்தம் சுமார் 40% அதாவது, 1800 கோடி ரூபாய்களை விட அதிகமென்பதாலும், அதிலும் மந்திகளினால் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்படும் சேதங்கள் படிப்படியாக அதிகரிக்கின்ற காரணத்தினால் எமது நாட்டின் விவசாயப் பெரு மக்களுக்கும் தேசிய பொருளாதாரத்துக்கும் நேரடி தாக்கம் ஏற்படுவதாலும், இலங்கை பௌத்த மற்றும் அகிம்சை நெறி கலாசாரத்துடன்கூடியதொரு நாடு என்ற வகையில் மந்திகளைக் கொல்வதன் மூலம் இப் பிரச்சினையைத் தீர்ப்பதை அனுமதிக்க முடியாது என்பதாலும், விஞ்ஞானபூர்வமான செயன்முறையொன்றின் மூலம் மந்திகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உகந்த வேலைத்திட்டமொன்று அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை வலுவூட்டுதல்
இலங்கையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்கான ஆற்றலைக்கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்றளவில் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதனால், அச்சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் துரிதமான வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
• சிறுவர்களின் சுகாதாரக் கல்வி தொடர்பான நிகழ்ச்சித்திட்டமொன்றை பாடசாலை மட்டத்தில் பிரபல்யப்படுத்துதல்
நசு்சுத் தன்மைமிக்க உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் இலங்கையில் சிறுவர்களின் ஆயுட்காலம் குறைவடைதல் மற்றும் கடுமையான நோய்களுக்கு ஆளாகுதல் நிகழ்வதாக பல்வேறு நிறுவனங்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால் போசாக்குமிக்க உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடற் சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் விருத்தி செய்து கொள்ள முடியுமென விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் சிறுவர்களின் சுகாதாரக் கல்வி தொடர்பான நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசாங்கம் சுகாதாரப் பிரிவுடன் ஒன்றிணைந்து தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ உத்திக்க பிரேமரத்ன
(ii) கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்க
அதனையடுத்து, 1508 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூன் 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






