இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023ஜூன் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-06-08

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான அம்பாறை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்கறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் (கச்சேரி) வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்டச்  செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(viii)    2022 ஆம் ஆண்டுக்கான பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2022 ஆம் ஆண்டுக்கான மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை
(x)    2022 ஆம் ஆண்டுக்கான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டிரான் அலஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஹேஷா விதானகே
(ii)    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

தேயிலை தொழிற்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் கௌரவ கமத்தொழில் அமைச்சர் ஆகியோர் பதிலளித்தனர்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 12 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii)    தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv)    இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2019)
(v)    இலங்கை ஹதபிம அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை (2020)
(vi)    ஹோடெல் டிவலொப்பர்ஸ் (லங்கா) பீஎல்சியின் வருடாந்த அறிக்கை (2017)
(vii)    ஹோடெல் டிவலொப்பர்ஸ் (லங்கா) பீஎல்சியின் வருடாந்த அறிக்கை (2018)
(viii)    ஹோடெல் டிவலொப்பர்ஸ் (லங்கா) லிமிடட்டின் வருடாந்த அறிக்கை (2019)
(ix)    ஹோடெல் டிவலொப்பர்ஸ் (லங்கா) லிமிடட்டின் வருடாந்த அறிக்கை (2020)
(x)    ஹோடெல் டிவலொப்பர்ஸ் (லங்கா) லிமிடட்டின் வருடாந்த அறிக்கை (2021)
(xi)    நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு தொடர்பான பிரேரணை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மத செல்வாக்கு கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மிலான் ஜயதிலக அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1616 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூன் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom